காசியில் ஒளிரும் சொர்ண அன்னபூரணி

By வா.ரவிக்குமார்

காசம் என்றால் ஒளி. பிரகாசம் என்றால் மங்காத ஒளி. இதைப் போலத்தான் காசி என்றாலும் மங்காத ஒளி, மங்காத ஞானம் என்று பொருள். பெயருக்கேற்ப முக்திக்கான இந்தியாவின் அடையாளமாகத் திகழ்கிறது காசி.

காசி விஸ்வநாதருக்கு செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது இரவில் நடத்தப்படும் சப்தரிஜி பூஜை. இதற்கான பொருட்கள் காலம் காலமாக காசி நகரத்தார் சத்திரத்திலிருந்தே செல்கின்றன. காசி விஸ்வநாதருக்கு நடைபெறும் ஐந்து கால பூஜையில் மூன்று கால பூஜையை 200 ஆண்டுகளுக்கும் மேலாக  காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மை கழகம் செய்து வருகிறது.

தென்னாட்டிலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து காசிக்கு யாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு செட்டிநாட்டைச் சேர்ந்த நகரத்தார்கள் சத்திரம் கட்டி 200 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகளுக்கான தங்குமிடம், உணவு, வழிகாட்டுதல்களை செய்து வருகின்றனர்.

தங்க அன்னபூரணி

“காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் உள்ள நகரேஸ்வரர் - நகரேஸ்வரி கோயிலுக்கு 5-வது முறையாக கும்பாபிஷேகம் வரும் 9-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான தங்கக் கலசங்கள் கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்டன. அத்துடன் தங்க அன்னபூரணி சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. காசிக்கு நேரில் வந்து எல்லோராலும் கும்பாபிஷேகத்தை நேரில் பார்க்க முடியாத காரணத்தால், கும்பங்களை நகரத்தார் வாழும் 76 ஊருக்கும், 9 நகரக் கோயில்களுக்கும் எடுத்துச்சென்று மக்கள் தரிசிக்க ஏற்பாடு செய்திருக்கின்றனர் நகரத்தார் சமூகக்தினர். கும்பங்களை கடைசியாகசென்னை அம்பத்தூர், பவழக்காரத் தெரு ரங்கோன் நகரவிடுதியில் நகரத்தார் பெருமக்கள் கும்பகலசத்தை தரிசிக்க ஏற்பாடு செய்தோம்” காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மை கழக அறக்கட்டளையின் தலைவர் லேனா காசிநாதன். தங்கள் அறக்கட்டளையின் சேவைகளைக் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.

“ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மை கழகம் கடந்த 200 ஆண்டுகளுக்கும் முன் எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. வியாபாரத்திற்கென இலங்கை, மலேஷியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து எனக் கடல் கடந்து செல்லும்போது வடமாநிலத்தில் கப்பலில் மாறி பயணிக்க இரண்டு, மூன்று நாட்கள் கல்கத்தா போன்ற நகரங்களில் தங்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது தங்கள் வசதிக்கென சத்திரம் கட்டப்பட்டது. இதை வட மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலும் கட்டுவதென தீர்மானித்து மிக முக்கியமாக பர்மாவாழ் நகரத்தார்கள் தொடங்கியதுதான் இந்த அரும்பெரும் சேவை.

காலப்போக்கில் கல்கத்தாவிலேயே பலர் தங்கி அரிசி வியாபாரம், உண்டி எனும் பணப்பரிமாற்றம் (Finance) எனத் தொழில் தொடங்கினர். அப்போதுதான் காசி, கயா , அலகாபாத், நாசிக் போன்ற வடமாநிலங்களில் சத்திரங்கள் கட்டப்பட்டு, அவையனைத்தும் காசி நாட்டுக்கோட்டை நகரசத்திர மேலாண்மைக் கழக டிரஸ்ட்ன் கீழ் தன சேவைகளைத் தொடங்கி இன்றளவும் அவை சிறப்பாக நடந்து வருகின்றன”என்றார் லேனா காசிநாதன்.

காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தின் உள்ளேயே நகரேஸ்வரர் -நகரேஸ்வரி என சிவன் - பார்வதிக்கு கோயில் அமைந்துள்ளது. இதற்கு மூன்று கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. தவிர ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பாதாளீஸ்வரர் கோவில், ஐம்பொன் நடராசர், அம்பாள் மற்றும் பிள்ளையாருக்கு மூன்று கால பூசை சிறப்பாக நடந்து வருகின்றன. இங்குள்ள அன்னபூரணி ஹாலில் அன்னபூரணி சிலையை வைத்து சம்போ முடிந்து வந்தபிறகு அன்னம் பாலித்து அன்னதானம் தொடங்குகிறது.

தீபாவளி அன்று மிட்டாய்த் திருவிழா

சத்திரத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி, தீபாவளி முன்னிட்டு இருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். நகரத்தார்கள் 1,500 முதல் 1,800 பேர் வரை வந்து தங்கி வழிபடும் விழா இது. முதல் இரண்டு நாட்களுக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். தீபாவளி அன்று காலை எண்ணெய், சீயக்காய் சத்திரத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் தரப்படும். கங்கையில் நீராடி வந்த பிறகு தங்க அன்னபூரணி, தங்க சொர்ணலிங்கம் ஆகியவற்றை தரிசிப்பார்கள். அத்துடன் காசி உள்ளூர் மக்கள் ஒரு லட்சம் பேர்வரை வரிசையில் நின்று தரிசிப்பதும் ஆண்டுதோறும் நடக்கும்.`சம்போ’வுக்கு மரியாதை

காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் ஐந்து கால பூஜைக்கும் மேளதாளம் முழங்க, விபூதி, குங்குமம், நெய், தேன், உலர்பழங்கள், கற்கண்டு, வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை என பழ வகைகளும் பூ, தினமும் அரைத்த சந்தனம் ஒரு கிண்ணம் ஆகியவை எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு `சம்போ’ என்று பெயர். இந்தப் பொருட்களை கொண்டு செல்லும்போது அவ்வூர் மக்கள், வியாபாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது இன்றும் தொடர்கிறது. இந்தப் பொருட்களை காணிக்கை கொடுக்கும் நகரத்தார் மக்களை `ஆரத்தி வாலா’ எனும் சிறப்பு பெயருடன் மரியாதையாக அழைக்கின்றனர்.65வது படித்துறை

கங்கைக் கரையில் 64 படித்துறைகள் (காட்) உள்ளன. இதில் நகரத்தார் சத்திரத்திற்கென்று ஒரு படித்துறையை வாராணசி மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. தமிழர்கள் வந்தால் இங்கு நீராடும் வசதியை நகரத்தார் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் செய்து தருகின்றனர்.தமிழ்த் தொண்டு

மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாராணசியில் உள்ள அவரது தாய்மாமன் வீட்டில் ஏழு ஆண்டுகள் தங்கி இருந்திருக்கிறார். அதன் நினைவாக உத்தரப்பிரதேச அரசும், அங்குள்ள தமிழ்ச் சங்கமும், வாராணசி நகராட்சியும் இணைந்து பாரதியாருக்கு வெண்கலச் சிலையை நிறுவி உள்ளன. இவ்வளவு காலம் அவரது தாய்மாமா அந்தச் சிலையை பராமரித்து வந்தார். வயது முதுமை காரணமாக அவரால் பராமரிக்க முடியாத சூழலில், நகரத்தார் அறக்கட்டளை நிர்வாகிகள், உரிய அனுமதி பெற்று, சிலை இருக்கும் இடத்தை மறுசீரமைப்பு செய்து பாரதியார் சிலைக்கு தினசரி மாலை போட்டு நைவேத்தியம் செய்து பிரசாதம் வழங்கி வருகின்றனர்.

`சம்போ’வுக்கு மரியாதை

காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் ஐந்து கால பூஜைக்கும் மேளதாளம் முழங்க, விபூதி, குங்குமம், நெய், தேன், உலர்பழங்கள், கற்கண்டு, வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை என பழ வகைகளும் பூ, தினமும் அரைத்த சந்தனம் ஒரு கிண்ணம் ஆகியவை எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு `சம்போ’ என்று பெயர். இந்தப் பொருட்களை கொண்டு செல்லும்போது அவ்வூர் மக்கள், வியாபாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது இன்றும் தொடர்கிறது. இந்தப் பொருட்களை காணிக்கை கொடுக்கும் நகரத்தார் மக்களை `ஆரத்தி வாலா’ எனும் சிறப்பு பெயருடன் மரியாதையாக அழைக்கின்றனர்.

65வது படித்துறை

கங்கைக் கரையில் 64 படித்துறைகள் (காட்) உள்ளன. இதில் நகரத்தார் சத்திரத்திற்கென்று ஒரு படித்துறையை வாராணசி மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. தமிழர்கள் வந்தால் இங்கு நீராடும் வசதியை நகரத்தார் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் செய்து தருகின்றனர்.

தமிழ்த் தொண்டு

மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாராணசியில் உள்ள அவரது தாய்மாமன் வீட்டில் ஏழு ஆண்டுகள் தங்கி இருந்திருக்கிறார். அதன் நினைவாக உத்தரப்பிரதேச அரசும், அங்குள்ள தமிழ்ச் சங்கமும், வாராணசி நகராட்சியும் இணைந்து பாரதியாருக்கு வெண்கலச் சிலையை நிறுவி உள்ளன. இவ்வளவு காலம் அவரது தாய்மாமா அந்தச் சிலையை பராமரித்து வந்தார். வயது முதுமை காரணமாக அவரால் பராமரிக்க முடியாத சூழலில், நகரத்தார் அறக்கட்டளை நிர்வாகிகள், உரிய அனுமதி பெற்று, சிலை இருக்கும் இடத்தை மறுசீரமைப்பு செய்து பாரதியார் சிலைக்கு தினசரி மாலை போட்டு நைவேத்தியம் செய்து பிரசாதம் வழங்கி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்