தருமராஜாவும் திரௌபதையம்மனும்

By ஆதி

பண்டைக் காலத்தில் பவுத்தர்களால் மணிமேகலை, சம்பாபதி தாராதேவி முதலிய சிறு தெய்வங்கள் வணங்கப்பட்டுவந்தன. இந்தத் தெய்வங்களின் கோயில்கள் பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாறி காளி, பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப் பெயர்களுடன் கிராமத் தேவதைகள் ஆக்கப்பட்டன என்கிறார் பவுத்த ஆராய்ச்சியாளர் மயிலை சீனி.வேங்கடசாமி.

காஞ்சிபுரத்தில் வீடு பேறடைந்த காவியத் தலைவியாகிய மணிமேகலையின் ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் பவுத்தரின் தாராதேவி கோயில் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வடதமிழகத்தில் உள்ள திரௌபதையம்மன் கோயில்கள், பண்டைக் காலத்தில் தாராதேவி கோயில்களாக இருந்தன என்று கூறப்படுகிறது.

தருமராஜா

அதேபோல, ‘தருமராஜா கோயில்கள்' என்ற பெயரில் அமைந்த கோயில்கள், பழங்காலத்தில் பவுத்தக் கோயில்களாக இருந்திருக்க வேண்டும். ‘தருமன்' அல்லது ‘தருமராசன்' என்பதும் புத்தரின் பெயர்களில் ஒன்று. பிங்கல நிகண்டில் ‘தருமன்' என்றும், திவாகரம், நாமலிங்கானு சாசனம் ஆகியவற்றில் ‘தர்மராஜன்' என்றும் புத்தருக்கு வேறு பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

தருமராஜா கோயில்கள் என்றழைக்கப்பட்ட இந்தப் பவுத்தக் கோயில்கள், இந்து மதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமனுக்கு உரிய கோயிலாகக் கற்பிக்கப்பட்டன.

பவுத்தர் போற்றும் ‘போதி' என்னும் அரச மரங்கள், தருமராஜா கோயில்களில் இன்றைக்கும் காணப்படுவது பண்டைக் காலத்தில் அவை பவுத்தக் கோயில்களாக இருந்தன என்பதற்கான ஆதாரம்.

வங்கத்திலும்

பவுத்த மதம் நிலைபெற்றிருந்த மேற்கு வங்கத்தில், சில பவுத்தக் கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களில் உள்ள புத்தச் சிலைகளுக்குத் ‘தருமராஜா' அல்லது ‘தருமதாகூர்' என்று பெயர் வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய

தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பவுத்தக் கோயில்களாக இருந்திருக்கக்கூடும்.

பெண் தெய்வங்கள்

தாராதேவி, மங்கலதேவி, சிந்தாதேவி முதலான பவுத்தப் பெண் தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராம தேவதைக் கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டன என்று தெரிகிறது. ‘தருமராஜா' புத்தர் கோயில்கள், பாண்டவ தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, ‘தாராதேவி' பவுத்தக் கோயில்கள், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதியின் கோயிலாக்கப்பட்டன,

“பவுத்தக் கோயில்கள் புத்தருடைய பல பெயர்களில் ‘தருமராஜா கோயில்', ‘சாத்தனார் கோயில்', ‘முனீஸ்வரர் கோயில்' உள்ளிட்ட பெயர்களுடன் பண்டைக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்து மதக் கோயிலாக மாற்றப்பட்டு, இந்துமதம் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, நாளடைவில் அவை கிராம தேவதைக் கோயில்கள் என்னும் நிலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றுகிறது” என்று பவுத்த ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்