சென்னை ஆலந்தூரில் உள்ள வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழாயொட்டி ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட தீமிதித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சென்னை ஆலந்தூரில் உள்ள வேம்புலியம்மன் கோயில் 100 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கி மொத்தம் 10 நாட்களுக்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் ஆடி மாத பிரமோற்சவம் கடந்த மாதம் 1-ம் தேதி அம்மனுக்கு காப்புகட்டி கொடியேற்றம் தொடங்கி 10-ம் தேதி வரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
10 நாட்களுக்கும் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காமதேனு வாகனம், விமானம் பூதகி வாகனம், விமானம் சிம்ம வாகனம், குதிரை வாகனம், கேடயம் சிம்ம வாகனம் உட்பட பல்வேறு வாகன அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், பிரமோற்சவத்தின் முக்கியவிழாவான தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரையில் நடந்தது. இதில், 2,800 பேர் கலந்து கொண்டு தீச்சட்டியை ஏந்தி சென்று வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago