தீபாவளி ஆன்மிகக் களஞ்சியங்கள்

By யுகன்

தத்ரூபமான சாயிபாபாவின் உருவைத் தாங்கிய முகப்பு அட்டையே முப்பரிமாணத் தோற்றத்தில் அருள்பாலிக்கிறது. சாயி மார்க்கம் இதழ் சாயிபாபா சமாதி அடைந்த நூற்றாண்டை ஒட்டிய சிறப்பான கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கிறது. சாயிபாபாவின் தனித்தன்மையே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அவரின் அருள் கடாட்சம்தான் . முதன்மையான கட்டுரையிலேயே சாயிபாபாவின் முழுப் பரிமாணமும் வெளிப்படும் வகையில் எஸ்.எல்.என்.னின் சொல்லோவியம் அமைந்திருக்கிறது. ஆசார்யா பரத்வாஜ் சுவாமிகள்,சந்திரபானு சத்பதி மஹராஜ், நீதியரசர் டி.எஸ்.அருணாசலம், லெஷ்மி, சி.சி.பார்த்திபன், வி.சுவாமிநாதன், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோரின் கட்டுரைகள் ஆன்மிகத்தில் தோய்ந்த அரிய விஷயங்களை அலசுகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் ஆன்மிக கல்விக்கான அவசியம் இருப்பதைச் சொல்கிறது ல பிரபுபாதாவின் பேட்டி, ஜெயதேவரின் அஷ்டபதி குறித்த கட்டுரையும், விமலா ரமணியின் ஆன்மிகச் சிறுகதையும் இதம். ஆங்காங்கே வண்ணத்தாளில் கவிதை மழையும் பொழிந்து இதழ் வாசிப்பை ரம்யமாக்குகிறது.

  l ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர்  l பக்கங்கள் - 102   l விலை ரூ.100

  l தொடர்புக்கு : 044- 23712195, 42550604

ஓவியர் ராஜாவின் மீரா கிருஷ்ணா முகப்பு ஓவியமே பக்தி அனுபூதியுடன் இதழின் உள்ளே நம்மை பிரவேசிக்க வைக்கிறது. ஆன்மிகக் கட்டுரைகள், சமூகக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், பயணக் கட்டுரைகள், இசைக் கட்டுரைகள், கதைகள், ஆலய தரிசனங்கள் எனப் பக்கத்துக்குப் பக்கம் செரிவான தகவல் களஞ்சியமாக வெளிவந்திருக்கிறது இதழ். ஓவியர்கள் பத்மவாஸன்,வேதா ஆகியோரின் கைவண்ணத்தில் தத்ரூப தரிசனங்களும் கண்களுக்கு விருந்தாகின்றன. காஞ்சி பெரியவரின் அன்னை வழிபாடு– ஓர் ஆன்மிகப் பொக்கிஷம். வேளுக்குடி கிருஷ்ணனின் `குழந்தைக் கண்ணன் குதூகலிக்கிறான்’ – ஒரு அருள் பிரசாதம். சுகி. சிவம் அவர்களின் எழுத்தோவியத்தில் பிரார்த்தனைகள் பிழையா, சரியா? இன்றைய சூழ்நிலைக்குத்  தக்க பதிலைச் சொல்கிறது. புறநகரான மீஞ்சூரில் அமைந்திருக்கும் புராதன ஆலயங்களை அறிமுகப்படுத்தும் டாக்டர் சித்ரா மாதவனின் கட்டுரையும், தேசிகரின் தமிழ்வன்மையைச் சொல்லும் கட்டுரையும் இறை உணர்வையும் தமிழுணர்வையும் தூக்கிப் பிடிக்கின்றன.

  l கோபுர தரிசனம் தீபாவளி மலர்  l பக்கங்கள் – 364   l விலை ரூ.150

  l தொடர்புக்கு : 044- 24516122

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்