சாரதாம்பாள் ஆலயம்.... ஒரு விளக்கம்!

By பவித்ரா

சென்ற ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில்  ஆதிசங்கரர் சிருங்கேரிக்கு வந்து சாரதாம்பாள் ஆலயத்தை ஸ்தாபித்தது தொடர்பாக எழுதப்பட்டிருந்த விவரங்கள் சரியானவை அல்ல என்றும், கீழ்காணும் வகையில் அது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் சிருங்கேரி மடத்தின் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர், தனது யாத்திரையின்போது சிருங்கேரிக்கு வந்தடைந்த சமயம், அங்கே அவர் கண்ட காட்சி மிகவும் மகிழ்வூட்டியது. 

பகைவர்கள் எனக் கருதப்படும் உயிர்களும் ஒன்றாக இருப்பதைப் பார்த்தார். பிரசவ வேதனையில் உள்ள தவளை மீது வெயில்படக் கூடாது என்று பாம்பு ஒன்று அதற்கு நிழல் கொடுத்தது. மானும் புலியும் ஒன்றாக துங்கபத்திரையில் நீர் அருந்தின.

ராமர் அவதாரத்துக்குக் காரணமாக இருந்த புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்த உதவியாக இருந்த ரிஷ்யசிருங்கரும் அவரது தந்தையான விபாண்ட மகரிஷியும் தவமிருந்த பூமி சிருங்கேரி. அந்தத் தவபூமியில் நடக்கும்போதே வேதச் சிந்தனைகள் ஆதி சங்கரரின் உள்ளத்தில் படர்ந்தன. இத்தகைய சூழ்நிலையைப் பார்த்து இதுவே சாரதாம்பாள் எழுந்து அருள்பாலிக்க உகந்த இடமென்று எண்ணம் கொண்டார்.

அப்படித்தான் அந்த அருமையான துங்கை நதிக்கரையில் சாரதாம்பாளை ஸ்தாபித்தார். வானவரும் போற்றித் தொழும் சாரதாம்பாளை நிரந்தரமாக அனைவரும் வழிபடும் முறையில் ஸ்ரீசக்கரத்தால் பிரதிஷ்டை செய்து நான்கு மடங்களில் முதல் மடமாக சாரதா பீடத்தை உருவாக்கினார். அங்கே பல ஆண்டுகள் தங்கி சாரதாம்பாளுக்கு பூஜைகள் செய்து நாட்டு மக்களுக்கு அம்பாள் நித்தியமாக அருள் செய்வதற்கு உதவினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

58 mins ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்