ஒட்டகம் காட்டிய வழி

பாலைவனத்தின் கப்பல் என்று ஒட்டகங்களைச் சொல்வார்கள். அண்ணல் நபிகளின் காலத்தில் அவரது செய்தியைப் பரப்புவதற்கும் ஒரு ஒட்டகம் மிகவும் துணையாக இருந்தது. மெக்காவிலிருந்த மன்னரின் தொடர்ந்த துன்புறுத்தல்களால் மெதினா செல்ல நினைத்த நபிக்கு அந்த ஒட்டகமே உதவியது. பயணத்தின் நடுவில் தம்மைக் கொல்ல வந்த எதிரிகளிடமிருந்து தப்பிக்க நபிகள் அவர்கள் ஒரு குகையில் தங்கினார்.

ஒரு நள்ளிரவில் மதினாவுக்கு மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கினார் நபிகள். அந்த வழியில் பல அற்புதங்கள் நடக்கத் தொடங்கின. மெக்காவுக்கும் மதினாவுக்கும் 350 கிலோமீட்டர் தூரம் இருக்கும். அக்காலத்தில் அந்த தூரத்தைக் கடக்க, 11 முழு நாட்கள் ஆகும். ஆனால் நபிகளைச் சுமந்து சென்ற ஒட்டகமோ எட்டே நாட்களில் மதினாவுக்குச் சென்றுவிட்டது.

நபிகள் இரவில் பயணம் செய்தார். பகல் பொழுது முழுவதும் ஓய்வெடுத்தார். எட்டாம் நாள், நபிகள் குபாவை அடைந்தார். அது மதினாவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரமே உள்ளது. அங்கே அவரது மருமகன் இமாம் அலி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் வந்து சேரும்வரை தங்கியிருந்தார். அவர்கள் வந்த பின்னர் புனித நகரமான மதினாவுக்கு பயணத்தைத் தொடங்கினர். பேரீச்சம் பழ மரங்கள் தெரியத் தொடங்கியதும் அவர்கள் மனதில் ஆனந்தம் அரும்பியது.

ஒரு குன்றின் மேல் அவரது வருகையைக் காண வந்திருந்த ஒருவன் இறை தூதரின் வருகையை அறிவித்துவிட்டான். மக்கள் அதைக் கேட்டதும், “அல்லாஹூ அக்பர்” என்று முழங்கத் தொடங்கினர். நபிகள் ஒட்டகத்திலிருந்து இறங்கி, ஒரு பேரீச்சை மரத்தின் நிழலில் அமர்ந்தார். நகரைச் சேர்ந்த பிரமுகர்கள் அவரை வணங்கி வரவேற்றனர். குழந்தைகள் பாடின.

மதினா நகரத்தில் உள்ள சமூகத் தலைவர்கள் நபிகள் தங்கள் இல்லத்திலேயே தங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். நபிகளோ, தனது ஒட்டகம் எங்கே நின்று தன் கால்களை மடக்கி இளைப்பாறுகிறதோ அதுதான் தனது இல்லம் என்று கூறினார்.

நபிகளின் ஒட்டகம் சென்று கொண்டே இருந்தது. ஒரு பெரிய திறந்த வெளியில் சென்று நின்றது. விளைபொருட்களை உலரவைக்கும் இடம் அது.

அந்த இடத்தின் அருகில் வசித்துவந்த அபு அயூப் என்பவரின் தாய், நபிகளின் உடைமைகளை எடுத்து அவரையும் வரவேற்றுத் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றாள். நபியோ, தனது உடைமைகள் எங்கே போகிறதோ அதுதான் தனது இருப்பிடம் என்று கூறி அந்த இடத்திற்குச் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

14 days ago

மேலும்