ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

By எம்.கே.விஜயகோபால்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா கொடியேற்றம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை ஏப்.11-ம் தேதி நடைபெறுகிறது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். கருடாழ்வார் வரையப்பட்ட பெரியக் கொடி மற்றும் கொடிமரத்திற்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, மீன லக்னத்தில் கொடியை ஏற்றி வைத்தனர். இன்று துவங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவ திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்- உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை ஏப்.8-ம் தேதியும், நம்பெருமாள்- ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி சேவை ஏப்.11-ம் தேதியும், கோரதம் எனப்படும் பங்குனித் தேரோட்டம் ஏப்.12-ம் தேதியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

மேலும்