பஹ்ரைன்: பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து நேற்று (மார்ச் 21) இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்வேறு சமூக நற்பணிகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து வெள்ளிக்கிழமை இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் பஹ்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியம் அல் டைன், ஹனான் ஃபர்தான் மற்றும் , பஹ்ரைன் பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரி ஹிஷாம் ஸால் கலீஃபா மற்றும் சல்மான் அல் ஃபாதல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் ஜிகே மற்றும் பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.
சுமார் 750 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இந்தியன் கிளப் உப தலைவர் ஜோசப் ஜாய் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அன்பு வணிகக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி சிறப்புரையாற்றினார். அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், தன்னாவலர்கள்,மகளிர் குழு உறுப்பினர்கள் இணைந்து, இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரையும் உபசரித்து உணவளித்து மகிழ்வித்தனர்.
» ஸ்டாலின் கூட்டிய தொகுதி மறுவரையறை ஜேஏசி கூட்டத்துக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஆதரவு!
» ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எவை? - ஜாம்பவான்கள் கணிப்பு
இறுதியாக, அன்னை தமிழ் மன்றத்தின் பொருளாளரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சுல்தான் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வு பஹ்ரைன் வாழ் தமிழர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷமான தருணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
12 days ago