பெரியோரின் ஆசி பெறுவோம்..! | மார்கழி மகா உற்சவம் 17

By கே.சுந்தரராமன்

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் |
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய், ||
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே |
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய் ||
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த |
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் ||
செம்பொற் கழலடிச் செல்வா, பலதேவா |
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை 17)

அனைத்து தோழிகளையும் எழுப்பிய பின்னர், ஆண்டாளின் தோழிகள் நந்தகோபன் மாளிகைக்கு வருகின்றனர். வாயிற்காப்போனின் சம்மதத்துடன் அரண்மனைக்குள் நுழைகின்றனர். இனி நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகிய நால்வரையும் எழுப்ப வேண்டும்.

ஆயர்பாடிகளின் தலைவன் என்பதால், நந்தகோபனுக்கு பல பொறுப்புகள் உள்ளன. அவரது முயற்சிகளால் ஆயர்பாடி அடிப்படைத் தேவைகள் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர். அவரை எழுப்பிய பிறகு, ‘எம்பெருமாட்டி’ என்று யசோதையை அழைத்து எழுப்புகின்றனர். கண்ணனை எழுப்புவதற்கு முன்னர், “வீரனான நீயும் உன் தம்பி கண்ணனும் உடனே எழுக” என்று கூறி பலதேவனை எழுப்புகின்றனர். நால்வரின் புகழைப் பாடி, அவர்களை தங்கள் பாவை நோன்புக்கு அழைக்கின்றனர்.

அடியவர்களுக்கு அமுதமானவன் சிவபெருமான்..!

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் |
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக் ||
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி |
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் ||
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை |
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை ||
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ப் |
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய் ||

(திருவெம்பாவை 17)

தேன்சிந்தும் மலர்களை சூடிய கருமையான கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணன் ஸ்ரீமன் நாராயணன், பிரம்மதேவர், பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க, நம் தலைவன் சிவபெருமான், இல்லம்தோறும் எழுந்தருள்கிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளை நாம் வணங்க வேண்டும் என்பதற்காக அவன் இறங்கி வருகிறான். நம்மை ஆட்கொள்ள ஒரு சேவகன் போல் செயல்படுகிறான். அழகிய கண்களை உடைய சிவபெருமான், அடியவர்களுக்கு அமுதமானவனாக உள்ளான். அவனை வணங்கினால் பல நன்மைகளைப் பெறலாம். உடனே நாம் அனைவரும் பொய்கையில் நீராடி, அவன் தரிசனம் பெறுவோம் என்று தோழிகள் ஒருவருக்கொருவர் பேசி கொள்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

16 mins ago

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்