அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்​டாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அனுமன் ஜெயந்தி, மார்கழி மாத அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா இன்று (டிச.30) அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை காலை மற்றும் மாலையில் லட்சார்ச்சனையும், 28-ம் தேதி சந்தனக்காப்பு அலங்கார தரிசனமும் நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தி தினமான இன்று காலை சிறப்பு திருமஞ்சனம், 7-ம் கால யாகம், மஹாபூர்ணஹுதி, கடம்புறப்பாடும், மாலை 4 மணி முதல் சிறப்பு அலங்கார தரிசனமும், அதனை தொடர்ந்து லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து, நாளை (டிச.31) முதல் ஜன.2-ம் தேதி வரை லட்சார்ச்சனையும், 2-ம் தேதி மாலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

இதேபோல், அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபாவில், ஆஞ்சநேயர் சுவாமிக்கு அதிகாலை காலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 6 மணிக்கு சிறப்பு வெள்ளி கவச தரிசனமும், அதன் பிறகு ஏகதிக லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. முன்னதாக, அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபாவில் ஆஞ்சநேயர் சிறப்பு லட்டு மாலை அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சென்னையில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் இன்று அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்