சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கு பிறகு இன்று இரவு நடை அடைக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜைக்காக 30-ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளதாவது: சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முதல் கட்டயாத்திரை மண்டல பூஜையுடன் நிறைவடையும். இந்த மண்டல பூஜையை தந்திரி கண்டரரு ராஜீவரு இன்று (டிச.26) மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறார். மண்டல பூஜை மற்றும் நெய் அபிஷேகத்துக்கு பிறகு ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு 11 மணிக்கு மூடப்படும். இத்துடன் சபரிமலையில் முதல்கட்ட யாத்திரை நிறைவடைகிறது.
அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்படும். மகரஜோதி நிகழ்ச்சி ஜனவரி 14-ம் தேதி நடைபெறும். இதற்கிடையே, சபரிமலையில் அடுத்த முக்கிய நிகழ்வான தங்க அங்கி ஊர்வலம் பத்தனம்திட்டாவில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த ஊர்வலம் நேற்று மாலை பம்பை வந்தடைந்தது. அங்கு ஊர்வலத்தை தேவசம் துறை அமைச்சர் வாசவன் வரவேற்றார். பின்னர், ஊர்வலம் சபரிமலையை சென்றடைந்து. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. இன்று மீண்டும் ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்படுகிறது. அத்துடன், மண்டலகால பூஜைகள் நிறைவடைகின்றன.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் முன்பதிவு மூலம் நேற்று 50,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இன்று 60 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்பாட் புக்கிங் முறையில் 5,000 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜைக்காக ஜனவரி 13-ம் தேதி 50,000 பக்தர்களுக்கும் ஜனவரி 14-ம் தேதி 40,000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
கடந்த 23-ம் தேதி வரை சபரிமலையில் 30,87,049 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 4.46 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சபரிமலை வந்துள்ளனர். கடும் வெள்ளம் காரணமாக பம்பா சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2018-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் தொடங்க திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago