மார்கழி மாத பிறப்பு: ராமேசுவரம் கோயில் நடை திறப்பு திங்கள் கிழமை முதல் மாற்றம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி நாளை (திங்கள்கிழமை) முதல் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட இருக்கிறது.

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை டிச.16 முதல் ஜனவரி 13-ம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

அதிகாலை 4 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தரிசனம், 5.00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை ஓதுதல் தீபாராதனை நடைபெறும்.

காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, 7.30 மணிக்கு விளா பூஜை, 10 மணிக்கு கால சந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறும். தொடர்ந்து பகல் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறந்து 3.30 மணிக்கு பொதுதரிசனம் துவங்கும்.

மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை, இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று நடை சாத்தப்படும்.

உற்சவ காலங்கள் மற்றும் சுவாமி புறப்பாடு காலங்களில் பூஜை நேரங்களும் மாறுதலுக்குட்பட்டது என ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்