தம்பிரான் ரிஷபானந்தரின் ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ நூல் வெளியீடு: தமிழறிஞர் சொ.சொ.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

சென்னை: தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் கணித்த ‘பஞ்​சபட்சி பஞ்சாங்​கம்’ நூல் மலேசிய நாட்​டில் வெளி​யிடப்​பட்​டது.

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவை​களைக் கொண்டு 27 நட்சத்​திரங் ​களுக்கு பலன் சொல்வது பஞ்சபட்சி சாஸ்​திரம். இது பல்லா​யிரம் ஆண்டு​களுக்கு முன்னர் காகபுஜண்டர் அருளிய ஜோதிட உயிர்​நிலை சாஸ்​திர​மாகும்.

மகாகுரு சிவவாக்கிய தம்பிரான் சுவாமிகளின் சீடரான தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள், ஜோதிடம், பஞ்சபட்சி சாஸ்​திரம், பிரம்ம ரகசியம் உள்ளிட்ட அரிய கலைகளில் தேர்ச்சி பெற்று, பலருக்​கும் வழிகாட்​டியாக உள்ளார். தனது பஞ்சபட்சி பலன்கள் மூலம் இதுவரை 10,000-க்​கும் மேற்​பட்டதிரு​மணங்களை நடத்தி வைத்​துள்ளார். பண்டைய நாட்​களில் அரசர்கள் மட்டுமே பயன்​படுத்தி வந்த பஞ்சபட்சி சாஸ்​திரத்தை சாதாரண மக்களும் பயன்​பெறும் வகையில் ‘தி இந்து’ நாளிதழின் ‘தமிழ் திசை’ பதிப்​பகம் சார்​பில் ‘பஞ்ச பட்சி பஞ்சாங்கம் - ரிஷபானந்​தரின் பொக்​கிஷம்’ என்ற தலைப்​பில் நூல் வெளியிடப்​பட்​டுள்​ளது.

2025 ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்​டுக்கான பலன்கள் இந்த நூலில் கூறப்​பட்​டுள்ளன. இந்த நூல் மலேசிய நாட்​டின் ஜொகூர் பாரு (Johor Bahru) நகரில் அண்மை​யில் வெளி​யிடப்​பட்​டது. திருப்பு​கழை​யும், திரு​வாசகத்​தை​யும் முற்றும் கற்றவரும், மிகச் சிறந்த தமிழறிஞரும், சிறந்த ஆன்மிகச் சொற்​பொழி​வாள​ரும், சௌராஷ்டிரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரி​களில் பணியாற்றி, ஓய்வு​பெற்ற வணிக​வியல் துறை பேராசிரியருமான சொ.சொ.மீனாட்சி சுந்​தரம் நூலை வெளி​யிட்​டார். நூலாசிரியர் தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் உடன் இருந்​தார்.

இந்நூலைப் பற்றிய கூடுதல் விவரங்களை இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து அறிந்து கொள்​ளலாம். இந்த நூலின் விலை ரூ.90. வரும் 15-ம் தேதி வரை 20 சதவீத சிறப்பு சலுகை​யில் இந்நூல் கிடைக்​கும். இந்தியா​வுக்​குள் புத்​தகங்களை அஞ்சல்​/கூரியர் மூலம் பெற ஒரு புத்​தகத்​துக்கு அஞ்சல் செலவு ரூ.30-ம், கூடுதல் புத்​தகம் ஒவ்வொன்​றுக்​கும் ரூ.15-ம் சேர்த்து, KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D, Money order அல்லது Cheque அனுப்​பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-2. போன்: 044-35048001. பணம் அனுப்​பிய​வரின் முகவரி மற்றும் கைபேசி எண்ணை அவசியம் குறிப்பிட வேண்​டும். கூடுதல் விவரங்​களுக்கு 7401296562 / 7401329402 ஆகிய செல்​போன் எண்களில் தொடர்பு கொள்​ளலாம். ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்