திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சிக்கு மகா தீபக் கொப்பரை இன்று (டிசம்பர் 12-ம் தேதி) கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றது. பின்னர் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. இதில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் கடந்த 10-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கார்த்திகைத் தீபத் திருவிழா நாளை (டிசம்பர் 13-ம் தேதி) நடைபெற உள்ளன. மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மலையே மகேசன் என போற்றப்படும் 2,668 உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு பரணி தீபமும் ஏற்றப்பட உள்ளன. மகா தீபத்தை பருவதராஜ குல சமூகத்தில் ஏற்ற உள்ளனர். மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு காணலாம்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரைக்கு இன்று(டிசம்பர் 12-ம் தேதி) அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன், இதற்கான பணியில் ஈடுபடும் பக்தர்கள் கொண்டு சென்றனர்.
» வானிலை முன்னறிவிப்பு: கோவை உள்பட 13 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கனமழைக்கு வாய்ப்பு
» வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: தந்தை பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மகா தீபக் கொப்பரையில் சிவ சிவ என எழுதப்பட்டும், ஆண் - பெண் சமம் என்பதை உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் படம் வரையப்பட்டிருந்தது. இதேபோல், மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 கிலோ நெய் மற்றும் திரி-க்காக ஆயிரத்து 500 மீட்டர் காடா துணி ஆகியவை அடுத்தடுத்து கொண்டு செல்லப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago