தேனி: விரதம் இருந்து கடும் பனி உள்ளிட்ட காலநிலையை எதிர்கொண்டு வரும் ஐயப்ப பக்தர்களுக்காக சக்தியூட்டும் உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டு வருகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாளிகைப்புறத்தம்மன் கோயில் பக்கத்தில் பிரமாண்டமான அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து உணவுகள் வழங்கப்படுகிறது. இங்கு வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கு நுழைவாயிலில் டோக்கன் வழங்கப்பட்டு பின்பு கூடத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் காலையில் ரவா உப்புமா, கொண்டைக்கடலை குருமா, சுக்குகாபி அளிக்கப்படுகிறது. மதியவேளையைப் பொறுத்தளவில் இஞ்சி, சீரகம், கிராம்பு, ஏலக்காய், நெய், காய்கறி உள்ளிட்ட கலவையில் சமைக்கப்பட்ட அரிசி சாதம் வழங்கப்படுகிறது.
» ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்? - திருமாவளவன் விளக்கம்
» அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்
இரவில் அரிசிக்கஞ்சி, ஊறுகாய், காய்கறி கூட்டும் அளிக்கப்படுகிறது. சன்னிதானத்தில் மட்டுமல்லாது நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் இதே உணவு வகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. விரதம் இருந்து கடுங்குளிர், மழை உள்ளிட்ட காலநிலையை எதிர்கொண்டு பக்தர்கள் மலையேறி வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு சக்தி ஊட்டும் வகையில் இந்த உணவு தயாரிக்கப்படுவதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அன்னதானம் சிறப்பு அதிகாரி திலீப்குமார் கூறுகையில், “மண்டல காலத்தில் இதுவரை 5,99,781 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் சந்நிதானத்தில் மட்டும் 4,047,81 பேர் பயனடைந்துள்ளனர். இதே போல் பம்பையில்1,56,000 பக்தர்களுக்கும், நிலக்கல்லில் 39,000 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. நெரிசலைப் பொறுத்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் தனி வரிசையில் அன்னதான கூடத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எளிதில் ஜீரணமாகும், உடலுக்கு சக்தி அளிக்கும் வகையிலான உணவுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.”. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 mins ago
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago