‘தி இந்து’ குழும பதிப்பகம் சார்பில் ‘முருகனின் மகிமை​ போற்றும் அறுபடை வீடு’ நூல் வெளியீடு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: ‘தி இந்து’ குழும பதிப்​பகம் சார்​பில் ‘முரு​க​னின் மகிமை​ போற்றும் அறுபடை வீடு’ (The Glory of Murugan and His Arupadai Veedu) என்ற தலைப்​பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல் வெளி​யீட்டு விழா சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்​றது.

இந்த நூல் முருகப் பெரு​மானின் அறுபடை வீடு​களான திருப்​பரங்​குன்​றம், திருச்​செந்​தூர், பழநி, சுவாமிமலை, திருத்​தணி, பழமு​திர்​சோலை ஆகிய​வற்றின் தனித்து​வம், வரலாறு மற்றும் அனைத்து சிறப்பு அம்சங்​களை​யும் விவரிக்​கிறது. மேலும், பிரபல ஆன்மிக எழுத்​தாளர்​கள், தங்கள் கருத்து​களைப் பதிவு செய்​துள்ளனர்.

300-க்​கும் மேற்​பட்ட படங்கள்: இதுதவிர, தமிழகம் முழு​வதும் உள்ள மேலும் பல பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள் குறித்த தகவல்​களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. 300-க்​கும் மேற்​பட்ட புகைப்​படங்​களும் இதில் இடம்​பெற்றுள்ளன. இந்த நூலை ‘தி இந்து’​வின் ‘ஃப்​ரைடே ரிவ்யூ’ பிரிவு முன்​னாள் பொறுப்​பாளர் கீதா வெங்​கடரமணன் தொகுத்​துள்ளார்.

அறுபடை வீடு​களில் ஒன்றான, தஞ்சாவூர் மாவட்டம் கும்​பகோணம் அருகே​யுள்ள சுவாமிமலை​யில் உள்ள சுவாமிநாத சுவாமி​யின் திரு​வடி​யில் நேற்று மாலை இந்தப் புத்​தகங்களை வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தப்​பட்​டது. தொடர்ந்து, ‘தி இந்து’ குழும இயக்​குநர் ரோஹித் ரமேஷ் தமிழ் மற்றும் ஆங்கிலம் பதிப்பு நூல்களை வெளி​யிட்டார்.

இந்நிகழ்​வில், ‘தி இந்து’ குழும துணைத் தலைவர் (விற்பனை மற்றும் விநி​யோகம்) தர் அரனாலா, இதழ்கள் மற்றும் சிறப்பு வெளி​யீடுகள் பிரிவு தலைவர் ஆர்.சீனிவாசன், முது​நிலைப் பொது மேலாளர் பாபு விஜய், திருச்சி பதிப்பு மேலாளர் கே.வெங்​கடேசன் உள்ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். நூலின் ஆங்கிலப் பதிப்​பின் விலை ரூ.2,999 மற்றும் தமிழ் பதிப்​பின் விலை ரூ.2,499. இந்த நூல்களை http://publications.thehindugroup.com/bookstore/ என்ற இணை​யதளத்​துக்​குச் சென்று The Hindu Group Bookstore மூலம் ஆன்​லைனில் ​முன்​ப​திவு செய்து வாங்​கலாம்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்