குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்க்க வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை

By செய்திப்பிரிவு

சென்னை: குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்த்​தால், அவர்​களது வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்​கும் என்று காஞ்சி காமகோடி பீடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்​கி​யுள்​ளார். கர்நாடக மாநிலத்​தில் கடந்த 3 வார காலமாக விஜய யாத்​திரை​யில் இருக்​கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 17-ம் தேதி எடநீர் மடத்​துக்கு விஜயம் செய்​தார்.

மடத்​தின் சார்​பில் பீடா​திபதி ஸ்ரீ சச்சி​தானந்த பாரதி சுவாமிகள், அவரை வரவேற்​றார். பின்னர் குக்கே சுப்​பிரமண்யா கோயில் உள்ளிட்ட கோயில்​களில் சுவாமி தரிசனம் செய்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 20-ம் தேதி உடுப்பி வந்தடைந்​தார். ஸ்ரீ கிருஷ்ணா மடத்​தின் சார்​பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. மத்வ சம்பிர​தாயப்படி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்​சலி, பொரி​யிட்டு மரியாதை செய்​யப்​பட்​டது.

மேலும் ஸ்ரீ கிருஷ்ணா மடத்​தில் கோடி கீதலேகனா யக்ஞத்தை, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்​தார். கடந்த 21-ம் தேதி சிக்​மகளூர் மாவட்டம் கோப்பா தாலு​கா​வில் உள்ள ஸ்ரீ ஜகத்​குரு பதரிசங்க​ராச்​சார்யா சமஸ்​தானம் - சகடபுரம் ஸ்ரீவித்​யாபீடத்​துக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்​தார். அங்கு சுவாமிகளை பல்லக்​கில் எழுந்​தருளச் செய்து, உற்சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

சகடபுரம் ஸ்ரீவித்யாபீடத்தில், ஜகத்குரு ஸ்ரீ வித்யாபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த
தீர்த்த மகாஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,
பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

ஜகத்​குரு ஸ்ரீ வித்​யாபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகாஸ்​வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்​வ​தி சுவாமிகளை வரவேற்று, இரண்டு மடங்​களுக்​கும் உள்ள நீண்ட கால தொடர்பை நினை​வு ​கூர்ந்​தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் பங்கேற்ற ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தன்னுடைய அனுக்​கிரஹபாஷனத்​தில், “சிறுவயதில் இருந்தே குழந்தை​களுக்கு ஆன்மிகம் தொடர்பான விஷயங்களை பயிற்று​விக்க வேண்​டும்.

நான் காஞ்சி சங்கர மடத்​துக்கு முதன்​முதலில் வந்த​போது, மகாஸ்​வாமி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்னை அரவணைத்து, பலவித ஆலோசனைகளை வழங்கி, அனைத்து கலைகளை​யும் கற்பித்​தார். நல்ல தெய்வீக சூழலை உருவாக்​கிக் கொடுத்​தார்.

பிரகாசமான எதிர்காலம்: இப்படி ஒவ்வொரு​வரும் தங்கள் இல்லங்​களில் ஆன்மிக, தெய்வீக சூழலை ஏற்படுத்தி, குழந்தை​களுக்கு நமது பாரம்​பரி​யம், கலாச்​சா​ரம், வேதம், சனாதன தர்மம் தொடர்பான தகவல்​களைத் தெரி​வித்து, நல்லகல்வி அளிக்க வேண்​டும். அப்போது அவர்​களது எதிர்கால வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்​கும்” என்று அருளினார். நிகழ்ச்​சி​யில், சகடபுரம் சமஸ்​தானத்​தின் நிர்​வாகி​கள், ​காஞ்சி சங்கர மடத்​தின் நிர்​வாகி​கள், வேத பாடசாலை குழந்​தைகள்​ என பலர்​ பங்​கேற்​றனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

10 days ago

மேலும்