குமுளி: சபரிமலை மலைப்பாதைகளில் மூடுபனிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் இங்கு வளைவுகள், சரிவுகள் அதிகம் இருப்பதால் அனுபவமற்ற ஓட்டுநர்களால் விபத்து அபாயம் உருவாகி வருகிறது.
சபரிமலைக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இப்பாதையில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். தமிழக எல்லையான குமுளியில் இருந்து வழிநெடுகிலும் வனப்பாதையே அமைந்துள்ளது.
தொடக்கப்பகுதியான குமுளி மலை உச்சிக்குச் செல்ல 7 கி.மீ. தூரத்துக்கு வனப்பாதை உள்ளது. இதனைக் கடந்ததும் வண்டிப்பெரியாறு, குட்டிக்கானம், முண்டக்காயம், எரிமேலி என்று தொடர்ந்து வனப்பகுதியிலே சாலை அமைந்துள்ளது. மேலும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சரிவும், வளைவுகளும் அதிகம் உள்ளன.
மேலும் குளிர், மழை காலங்களில் மூடு பனியின் தாக்கம் இங்கு அதிகம் இருக்கும். இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டுநர்கள் இச்சாலையில் வண்டிகளை இயக்கி நன்கு அனுபவம் உள்ளவர்களாக உள்ளனர். ஆனால் சபரிமலைக்கு வரும் சில ஓட்டுநர்கள் இச்சாலைக்கு புதியதாக உள்ளனர். இதனால் தடுமாற்றமும், சிறு விபத்துக்களும் ஏற்படுகின்றன. சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தார். மேலும் குமுளி வனச்சாலையில் பக்தர்கள் வரும் சில கனரக வாகனங்களால் போக்குவரத்தில் தடுமாற்றம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் தற்போது ஏற்பட்டு வரும் மூடுபனி மலைப்பகுதியில் வாகனங்களை இயக்குவதில் அனுபவம் இல்லாதவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஆகவே அனுபவம் உள்ள வாகன ஓட்டுநர்கள் மூலம் தங்களின் சபரிமலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “தற்போது சபரிமலை வழித்தடத்தில் பக்தர்களின் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது முற்றிலும் வனவழிப்பாதையாகும். தரைத்தளத்தைப் போல இங்கு வாகனங்களை இயக்கினால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும். ஆகவே சொந்த வாகனம் வைத்திருப்பவர்களும் அனுபவம் மிக்க ஓட்டுநர்களையே நியமித்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago