அரக்கோணம்: சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா இன்று (நவ.20) சுவாமி தரிசனம் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பெருவிழா தொடங்கி உள்ள நிலையில், உள்ளூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ‘கங்குவா’ திரைப்பட இயக்குநர் சிறுத்தை சிவா ஆகியோர் சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் இன்று (நவ.20) காலை சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கம்பி வட ஊர்தி வழியாக (ரோப் கார்) பயணித்து மலையின் மீதுள்ள ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி மற்றும் அமிர்தவல்லி தாயாரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. கோயிலில் சூர்யா மற்றும் இயக்குநர் சிவாவை சந்தித்த பக்தர்கள் பலரும் அவர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago