தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் ஆதீனத்தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் வேதனை

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: சூரியனார் கோயில் ஆதீனத்​தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாத​தால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்​கோ​யில் ஆதீனம் 28-வது குருமகா சந்நி​தானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சுவாமி, கர்நாடக மாநிலத்​தைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை கடந்த மாதம் பதிவுத் திரு​மணம் செய்து கொண்​டார். இதற்கு அந்த கிராம மக்களில் ஒருதரப்​பினர் எதிர்ப்பு தெரி​வித்து, கடந்த 13-ம் தேதி மடத்தை பூட்​டினர்.

இதையடுத்து, சூரியனார் கோயில் ஆதீனகர்த்​தர், மடத்​தின் நிர்​வாகப் பொறுப்புகளை அறநிலையத் துறை​யிடம் ஒப்படைத்து​விட்டு, அங்கிருந்து புறப்​பட்டுச் சென்​றார். இதையடுத்து, மடத்​தில் உள்ள சிவாக்​கரயோகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு பண்டாரத்​தார் மூலம் நித்ய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மடத்​தில் ஆதீன அறைக்​குள் தினந்​தோறும் நடைபெறும் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெற​வில்லை. இதனால், பக்தர்கள் வேதனையடைந்​துள்ளனர். எனவே, பிற ஆதீனங்கள் இதற்கு உரிய தீர்வு காண வேண்​டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அறநிலை​யத்​துறை அதிகாரி​களிடம் கேட்​ட​போது, “மடத்​தில் வழக்​கம்போல நித்ய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆதீனத்​தின் அறையில் ஆத்மார்த்த பூஜைகள் செய்வது குறித்து, ஆதீனங்​களின் அடுத்​தகட்ட முடிவைப் பொறுத்து நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்” என்றனர்.

இது தொடர்பாக திரு​வாவடு​துறை ஆதீன பொது மேலாளர் ராஜேந்​திரன் கூறும்​போது, “சூரியனார் கோயில் ஆதீனம், எங்கள் ஆதீன கட்டுப்​பாட்​டில்​தான் உள்ளது. சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் எங்களிடம் இருந்​து​தான், அந்த மடத்​தின் ஆதீனப் பொறுப்புகளை பெற்​றார். ஆனால், அவர் எங்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்​காமல், அரசிடம் ஒப்படைத்​துள்ளார். நாங்கள் இது தொடர்​பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அந்த மடத்​துக்கு ஆதீனத்தை நியமிப்​ப​தற்கான அதிகாரம் எங்கள் ஆதீனத்​துக்கு மட்டும்​தான் உள்ளது. அரசிடம் இருந்து பதில் வந்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்றார்.

இது தொடர்பாக சூரியனார்​கோ​யில் ஆதீனம் மகாலிங்க சுவாமியை தொடர்பு கொண்டு கேட்​ட​போது, “கடலூர் மாவட்​டத்​தில் உள்ள ஒரு கிளை மடத்​தில் தங்கி உள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை மேற்​கொள்வது குறித்து விரை​வில் தெரி​விப்​பேன்” என்றார். சூரியனார் கோயில் மடத்​துக்கு ஆதீனத்தை நியமிப்​ப​தற்கு, திரு​வாவடு​துறை ஆதீனத்​துக்​குத்​தான் அதிகாரம் உண்டு எனக் கூறுகிறார்களே என்று கேட்​டதற்கு, “இப்​போது அதைப் பற்றி கருத்து தெரிவிக்க ​விரும்ப​வில்லை" என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்