சென்னை: ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ‘பெரியவா - சீசன் இரண்டு’, மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ‘பெரியவா - சீசன் இரண்டு’, மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதை ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி வெளியிட்டார்.
விழாவில், இரு தொடர்களையும் தயாரித்த இயக்குநர் சாணக்யா உரையாற்றும்போது, “கடந்த வருடம் மகான் காஞ்சி பெரியவர் பற்றிய தொடர் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு மக்கள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து தற்போது ‘பெரியவா - சீசன் இரண்டு’, மஹான் ரமண மகரிஷிபற்றிய ‘மஹர்ஷி’ ஆகிய தொடர்கள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
இதில் குடும்பக் கதையின் பின்னணியை வைத்து மகா பெரியவரின் உபதேசங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன” என்றார். விழாவில் பேசிய ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி, “மகா பெரியவருடன் எனக்கு 30 ஆண்டுகாலம் பழகிய அனுபவம் உள்ளது. உலகுக்கு வழிகாட்டும் சித்தாந்தம் நமது நாட்டில் உள்ளது. தர்மத்தைக் காப்பாற்றக் கூடியது ஆன்மிகம். பெண்களால்தான் குடும்பம், கலாச்சாரம், பண்பு, பாரம்பரியம் ஆகியவை உள்ளன.இந்தநாட்டில் பெண்கள் இருக்க வேண்டும் என்றால் ஆன்மிகம் இருக்க வேண்டும். பெண்மைதான் இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பம்.
பெண்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் தர்மம் அழியும். இந்த தொடர் சங்கரா தொலைக்காட்சி மட்டுமின்றி மற்ற ஆன்மிக தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட செய்ய வேண்டும். இதன் மூலம், இது அனைவர் மத்தியிலும் சென்று சேர வேண்டும்” என்றார். இவ்விழாவில், ஆடிட்டர் ஜே.பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை ரமணாசிரமம் டிரஸ்ட் நிர்வாகி எஸ்.கிருஷ்ணன், ஓவியர் மணியம் செல்வம், ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் கே.ஸ்ரீ ராம், ரேவதிசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
» அதிக விலை கொண்ட போதை பொருள் விற்பனை: நைஜீரிய இளைஞர் உட்பட 13 பேர் சென்னையில் கைது
» 9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ‘பெரியவா - சீசன் இரண்டு’ தொடர் வரும் டிச.7-ம் தேதி மாலை 7.30 மணிக்கும், மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹர்ஷி’ தொடர்டிச.8-ம் தேதி மாலை 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகின்றன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago