மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி - புனித நீராடிய பக்தர்கள்

By வீ.தமிழன்பன்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இன்று (நவ.15) சிறப்பான வகையில் நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமையின் காரணமாக கருமை நிறமாக மாறிய கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. எனவே காசிக்கு நிகராக இத்தலம் கருதப்படுகிறது. அதனடிப்படையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

மாதம் முழுவதும் நாள்தோறும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டு அக்.17-ம் தேதி துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கியது. நவ.1-ம் தேதி அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது.

மதியம் 1.30 மணியளவில் கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாரப்பர், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தெப்பக்குளம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், படித்துறை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரி தென் கரையிலும், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு காவிரி வடக்கு கரையிலும் எழுந்தருளினர்.

தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தெற்கு கரையிலும், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், முன்னிலையில் வடக்கு கரையிலும் அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஆதீனகர்த்தர்கள் உள்ளிட்ட காவிரியின் இரு கரைகளிலும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து ஆற்றின் இரு கரைகளிலும் காட்சியளித்த சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு மகாதீபாரதனைக் காட்டப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீன கட்டளை விசாரணை வேலப்ப தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாசாரியார், எம்.எல்.ஏ எஸ்.ராஜகுமார், நகர்மன்றத் தலைவர் என்.செல்வராஜ் உள்ளிட்டோர் தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காவிரியின் இரு கரைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நகராட்சி சார்பில் பெண்கள் உடை மாற்றும் அறைகள், சுகாதாரத் துறை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்