திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 365 நாட்களில் 430-க்கும் மேற்பட்ட விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெறுவது ஐதீகம். தினமும் சுவாமிக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.
திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் ஏராளம். 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதம் இருமுறை நடைபெறும் சேவைகளும் உண்டு. காலை சுப்ரபாதம் தொடங்கி, இரவு ஏகாந்த சேவை வரை தினசரி சேவைகள் முதற்கொண்டு, பிரம்மோற்சவம், ரதசப்தமி, தெப்போற்சவம், புஷ்பயாகம், உகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ்தானம், பத்மாவதி திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி என வருடாந்திர சேவைகளும் கோலாகலமாக பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதில் மூலவரின் சன்னதியில் உள்ள உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி, ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே கைஷிக துவாதசியன்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெளியே பல்லக்கில் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி நேற்று அதிகாலை திருமலையில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கைஷிக துவாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி நேற்று அதிகாலை லேசான மழை பெய்த போதிலும் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஜீயர்கள், தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி, தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், கோயில் பேஷ்கர் ராமகிருஷ்ணா உட்பட திரளான பக்தர்களும் பங்கேற்றனர்.
தனி மையம்: திருமலையில் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்களுக்காக தனி விநியோக மையத்தை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி நேற்று திறந்து வைத்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவர்கள் கூடுதலாக ரூ.500 செலுத்தி விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெறலாம். முந்தைய நாள் பெறப்பட்ட இந்த டிக்கெட் மூலம் மறுநாள் காலையில் சுவாமியை வெகு அருகில் இருந்து தரிசிக்கலாம். இதற்கு யாருடைய சிபாரிசும் தேவையில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்னதாகவும் இந்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாக திருமலைக்கு வந்தும் டிக்கெட் பெற்று கொள்ளலாம். நேரில் வரும் பக்தர்களுக்கு தினமும் 900 டிக்கெட்கள் வரை வழங்கப்படுகிறது. இதுவரை திருமலையில் உள்ள இணை நிர்வாக அதிகாரி அலுவலக வளாகத்தில் இதற்கான டிக்கெட்கள் வழங்கப் பட்டன.
இந்நிலையில், இதற்காக திருமலையில் கோகுலம் கான்பரன்ஸ் ஹால் பின்புறம் தனியாக அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் விநியோக மையத்தை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி நேற்று திறந்து வைத்தார். இதில் 5 கவுன்டர்கள் இருப்பதால் ஒரு நிமிடத்தில் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago