சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, நவம்பர் 15 முதல் ஜனவரி 16-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை திருவிழாக்களின்போது, தமிழகத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் செல்கின்றனர். அவர்களது வசதிக்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, இந்த ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நவம்பர் 15 முதல் 2025 ஜனவரி 16-ம் தேதி வரை சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள், குளிர்சாதன வசதியில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இருக்கைகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து தரப்படும்.
» வழக்கை இழுத்தடித்தால் ஆத்திரம்: நாகர்கோவில் அருகே வழக்கறிஞரை கொன்று, உடலை எரித்த கொடூரம்
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, டிசம்பர் 27 முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 முதல் 29-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. மேலும் விவரங்களுக்கு 9445014452, 9445014424, 9445014463 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago