அ
ப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயக் குரவர்களால் பாடல் பெற்ற சிறப்பு, தேவாரத்தால் பாடல் பெற்ற 274 சிவஸ்தலங்களில் 110 தலம் எனும் சிறப்பு, 51 சக்தி பீடங்களில், கால சக்தி பீடம் எனும் சிறப்பு பெற்றது... என்பது போன்ற பல சிறப்புகளைத் தன்னகத்தே கொணடது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம். அதோடு மார்கண்டேயனை, எமனின் பாசக் கயிறிலிருந்து காப்பாற்ற, காலனையே கொன்றதால், காலசம்கார மூர்த்தியாகவும் வணங்கப்படுகிறார்.
சுப்பிரமணிய பட்டரிடம் அரசன் இன்று அமாவாசையா, பவுர்ணமியா என்று கேட்டார். அபிராமியின் அருளில் மூழ்கியிருந்த சுப்பிரமணிய பட்டர், இன்றைக்கு பவுர்ணமி என்று கூறிவிட்டார். ஆனால் அன்றைய தினம் அமாவாசை. இதனால் கோபப்பட்ட அரசன் இன்றைக்கு பவுர்ணமி நிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை நிச்சயம் என்றார்.
அரசனின் கோபத்திலிருந்து தன்னைக் காக்க அபிராமி அந்தாதியைப் பாடிய பக்தனைக் காப்பதற்காக, தனது காதணியை ஒளிரச் செய்து, அந்நாளை பவுர்ணமியாகக் காட்டுகிறார். அபிராமி அந்தாதி பாடப் பட்ட சிறப்பினையும் கொண்டது இந்தத் தலம்.
எம பயத்தைப் போக்க 107 சிவ ஆலயங்களைத் தொழுத மார்கண்டேயர் 108வது ஆலயமாக இந்த ஆலயத்தைத் தொழும்போது, சிவனுக்கு காசியிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்தார். மார்கண்டேயனின் பக்தியை மெச்சிய சிவபெருமான், திருக்கடவூர் மயானத்திலிருக்கும் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு அருகே உள்ள ஒரு கிணற்றில் கங்கையின் நீரைப் பொங்கச் செய்தார்.
அதுமுதல் அமிர்தபுஷ்கரணி கங்கை தீர்த்தமாக இது கருதப்படுகிறது. இந்தக் கிணற்று நீரே இன்றைக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் யாரும் நீராடுவது கிடையாது. கங்கை பொங்கியதாக நம்பப்படும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago