மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை 7 மணியளவில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. பின்னர் உற்சவர் சன்னதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்பு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர் வள்ளி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
அதனைத்தொடர்ந்து காலை 9 மணியளவில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகம், சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொண்டுள்ளனர். விழாவையொட்டி தினமும் சண்முகர் சன்னதியில் காலை, மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் இரவு 7 மணியளவில் விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது
» சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா: உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி கோலாகலம்
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவ.6-ம் தேதி மாலையில் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய, கோவார்த்தன அம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக நவ.7-ம் தேதி சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். நிறைவு நாளான நவ.8-ம் தேதி காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சட்டத் தேரில் எழுந்தருள்வர். அன்று மாலை பாவாடை தரிசனம் நடந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
கோயிலில் 7 நாட்கள் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தினை மாவு, எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவை வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மத்தேவன், சண்முகசுந்தரம், ராமையா, பட்டர்கள், கோயில் பணியாளார்கள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago