திருச்செந்தூர் கந்த சஷ்டி பெருவிழா: சூரசம்ஹார நிகழ்வில் 6 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வர் என தகவல்

By துரை விஜயராஜ்

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி பெருவிழா நவம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது. சூரசம்ஹார நிகழ்வில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி பெருவிழா நவ.2-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான 7-ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நவம்பர் 2-ம் தேதி தொடங்கி, நவம்பர் 7-ம் தேதி சூரசம்ஹாரமும், 8-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

கந்த சஷ்டி விரதம் தொடங்கும் முதல் ஐந்து நாட்களுக்கு தினம் ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹார தினத்தன்று சுமார் ஆறு லட்சம் பக்தர்களும், திருக்கல்யாணத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பக்தர்களும் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவதால் அவர்களின் தேவைக்கேற்க வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி 181 இடங்களில் சிசிடிவி கேமராக்களும், கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. விழா நாட்களில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவதோடு ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் அவர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள 18 இடங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுரடி பரப்பளவில் நிழல் கொட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்கு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை முழுமையாக நிறைவேற்றி தரப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் விரைவாக தரிசனம் செய்திட சிறப்பு வழி அமைக்கப்பட உள்ளது.

அதேபோல், தீயணைப்புத் துறை, கடலில் நீராடும் பக்தர்களுக்காக கடல் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படும். சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் 400 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

16 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

23 days ago

ஆன்மிகம்

23 days ago

ஆன்மிகம்

24 days ago

ஆன்மிகம்

24 days ago

மேலும்