வார ராசி பலன் 24-4-14 முதல் 30-4-14 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷம்

உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரன் உலவுவதாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், சனி 7-ல் வக்கிரமாக இருப்பதாலும் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். வார முன்பகுதியில் சந்திரன் 11-ஆமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால் கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து உபசாரங்களிலும் கலந்து கொள்வீர்கள்.

வார நடுப்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் அதிகம் அனுகூலமிராது. இடமாற்றம் உண்டாகும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் சுபகாரியச் செலவுகள் கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அலைச்சல் சற்று அதிகரிக்கும்.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 24 (முற்பகல்), 25, 28 (பிற்பகல்).

>> திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு. >> நிறங்கள்: வெண்மை, சிவப்பு. >> எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: நவக்கிரகங்களில் குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.



ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் அதிக லாபம் தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோர் உதவுவார்கள். 28-ம் தேதி முதல் சந்திரன் 12-மிடம் மாறி, சூரியன், புதன், கேது ஆகியோருடன் கூடுவதால் செலவுகள் அதிகமாகும்.

கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 24 (முற்பகல்), 25, 27. >> திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பொன் நிறம், கறுப்பும் வெள்ளையும் கலந்த புகை நிறம். >> எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: சூரியனை வழிபடவும். பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும். ஏழை மாணவர்களுக்கு உதவவும்.



மிதுனம்

சூரியன், புதன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் சந்திர பலம் கூடியிருப்பதாலும் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப் பணியாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும்.

வியாபாரம் பெருகும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 24 (முற்பகல்), 25, 27, 28. >> திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.

>> நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை, மெரூன். >> எண்கள்: 1, 5, 6, 7.

>> பரிகாரம்: சுப்பிரமணியரையும் துர்கையையும் வழிபடவும்.



கடகம்

3-ல் வக்கிர செவ்வாயும், 4-ல் வக்கிர சனியும், 8-ல் சுக்கிரனும், 10-ல் சூரியன், புதன் கேது ஆகியோரும் உலவுவதால் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். புனிதப் பணிகளில் ஈடுபாடு கூடும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதால் சுகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகளும் சேரும். கலைத் துறையினருக்குச் சிறப்பாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் வரும். பண நடமாட்டம் அதிகமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 27, 28. >> திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு. >> எண்கள்: 1, 5, 6, 7, 9.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியையும், துர்கை அம்மனையும் வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, அவர்களது வாழ்த்துக்களைப் பெறவும்.



சிம்மம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும்,9-ல் சூரியனும் 11-ல் குருவும் உலவுவதால் பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரால் நலம் பெறுவீர்கள். பொருளாதார நிலை உயரும். எதிர்ப்புக்கள் குறையும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். சுகம் கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கும், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

26-ஆம் தேதி குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்பட்டு விலகும். 28-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். வாரப் பின்பகுதியில் தான, தர்ம, தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும்.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 24 (முற்பகல்), 25, 28 (பிற்பகல்).

>> திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடகிழக்கு. >> நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, புகை நிறம்.

எண்கள்: 1, 3, 4. >> பரிகாரம்: முருகனையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும். பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கவும்.



கன்னி

கோசாரப்படி கிரக நிலை சிறப்பாக இல்லாததால் எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். பதற்றம் கூடாது. பொறுமை மிக அவசியம். குடும்ப நலனில் அக்கறை தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும்.

பயணத்தின்போது பாதுகாப்புடன் இருப்பது நல்லது. பெண்களால் பிரச்னைகள் சூழும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும். வாரப் பின்பகுதி சோதனையானது. பெற்றோர் நலனில் கவனம் தேவை. கண், மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். நேர்வழியில் சென்றால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

>> அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 24 (முற்பகல்), 25, 27, 28 (காலை). >> திசை: வடக்கு. >> நிறம்: பச்சை, பிரெளன், ரோஸ்.

>> எண்: 5. >> பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபடவும். கணபதி, நவக்கிரக ஹோமம் செய்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்