திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 2-ம் தேதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் நவம்பர் 2-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

விழாவின் முதல்நாளான நவ. 2-ம் தேதி அதிகாலை ஜெயந்திநாதப் பெருமான் யாகசாலைக்கு எழுந்தருள்கிறார். அன்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பகல் 2.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருகிறார். மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து கிரி வீதி வழியாக உலா வந்து திருக்கோயிலை சேர்கிறார்.

நவ. 7-ம் தேதி மாலை கோயில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி, சூரனை வதம் செய்கிறார். வரும் 8-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்