திருவனந்தபுரம் செல்லும் குமரி சுவாமி விக்கிரகங்களுக்கு கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரியில் இருந்து சென்ற 3 சுவாமி விக்கிரகங்களுக்கு தமிழக - கேரளா எல்லையான களியக்காவிளையில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், பத்மனாபபுரம் சரஸ்வதி தேவி, வேளிமலை முருகன் ஆகிய 3 சுவாமி விக்கிரகங்கள் மன்னர் கால மரபுப்படி ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவுக்காக பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து நேற்று காலை 3 சுவாமி விக்கிரகங்களும் ஊர்வலமாக புறப்பட்டு தக்கலை, அழகிய மண்டபம், மார்த்தாண்டம் வழியாக குழித்துறை மகாதேவர் கோயில் வளாகத்தில் தங்கியது.

அங்கிருந்து இன்று அதிகாலை ஊர்வலமாகப் புறப்பட்டு கேரள எல்லையான களியக்காவிளைக்கு வருகை தந்த சுவாமி விக்கிரகங்களுக்கு முறவறக் கோணம் இளம்பால கண்டன்தர்ம சாஸ்தா ஆலய பக்தர்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குழித்துறை மஹாதேவர் ஆலயத்தில் இருந்து பாறசாலை மகாதேவர் கோயில் வரை விளக்குகெட்டு, பூக்காவடி, மைலாட்டம், தெய்யம், சிங்காரி மேளம், தாலப்பொலி, புலிக்களி, தெய்வ ரூபங்கள், அலங்கார தோரணங்கள் உள்ளிட்ட வாத்திய முளக்கங்களுடன் பி.பி.எம் சந்திப்பில் இருந்து மலர்கள் தூவி, 101 தட்டு பூஜைகள், மஹா நிவேத்தியமாக கொடுத்து நவராத்திரி சுவாமி விக்கிரகங்களை பக்தர்கள் வரவேற்றனர்.

களியக்காவிளை வந்து சேர்ந்த சுவாமி விக்கிரகங்களுக்கு கேரளா மாநில அரசு சர்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன், கேரள மாநில தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து 3 சுவாமி விக்கிரகங்களுக்கு கேரளா மாநில போலீஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடந்து வாத்திய குழுவினர் இசையொலி முழங்க சுவாமி விக்கிரகங்கள் கேரள மாநிலம். பாறசாலை, உதியன்குளம் வழியாக நெய்யாற்றின்கரை கிருஷ்ண சுவாமி கோயிலை அடைந்தது. அங்கிருந்து நாளை காலை புறப்பட்டு கரமனை சென்றடையும். வேளிமலை முருகன் விக்கிரகம் புறப்பட்டு ஆரிய சாலையிலும், முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டையிலும் தங்கவைக்கப்படவுள்ளது. சரஸ்வதி அம்மன் விக்கிரகம் நவராத்திரி கொலு மண்டபத்தில் அமர்த்தப்படும்.

நவராத்திரி விழா முடிவடைந்த பிறகு 13-ம் தேதி நடக்கும் விஜயதசமி விழாவுக்கு பின் ஒரு நாள் நல்லிருப்பிற்கு பின் அங்கிருந்தது 3 சுவாமி விக்கிரகங்களும் மீண்டும் குமரி மாவட்டம் கொண்டு வரப்பட உள்ளது. நவராத்திரி ஊர்வலத்தை சிறப்பிக்கும் வண்ணமாக இன்று காலை ஒட்டன் துள்ளல், பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் களியக்காவிளை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் நடந்தன. அப்போது ஏராளமான பக்தர்கள் மழையில் நனைந்தபடி சுவாமி விக்கிரகங்களை தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்