தொடங்கியது புரட்டாசி மாதம்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு

By செய்திப்பிரிவு

திருமலை: புரட்டாசி மாதத்தில், தமிழ்நாட்டி லிருந்து அதிகளவிலான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருவது வழக்கம். நேற்று புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலையில் பக்தர்கள் கூட்டம்அலைமோத தொடங்கி விட்டது.

பஸ் நிலையம், ரயில் நிலையம், அலிபிரி சோதனை சாவடி என திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காணப்படுகிறது. இதனால் நேற்று ஆதார் அட்டை இல்லாமல் சுவாமிதரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 24 மணி நேரம் வரை காத்திருந்து சர்வ தரிசனம் மூலம் சுவாமியை வழிபட்டனர்.

இந்நிலையில், நேற்று திருமலையில் உள்ள மத்திய ரிசப்ஷன்அலுவலகத்தை ஆய்வு செய்ததேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ், செய்தியாளர் களிடம் கூறியதாவது: தொடர் விடுமுறைகள் மற்றும் புரட்டாசி மாதம் தொடங்கியதாலும் திருமலைக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆதலால் சுவாமியை தரிசிக்க 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

தேவஸ்தானம் சார்பில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு டீ, பால், சிற்றுண்டி, உணவு, குடிநீர்உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மூத்த அதிகாரிகளும் இரவும், பகலுமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை கண்காணித்து வருகின்றனர். இந்தபுரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவமும் வரும் அக்.4-ம் தேதிதொடங்கி, 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆதலால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பொறுமைகாத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சியாமள ராவ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE