சென்னை: கோடம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.16-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அந்த வகையில், புதிதாக வாராஹி, அன்னபூரணி, ஆஞ்சநேயர், பூர்ணா புஷ்கலா சமேத தர்மசாஸ்தா, நாகத்தம்மன், கன்னிமார்கள் சந்நிதிகளோடு, கோயில் தெய்வங்களான விநாயகர், பாலமுருகன், வைஷ்ணவி, மாஹேஸ்வரி, துர்கை, நவக்கிரகங்கள் சந்நிதிகளுடன் அங்காள பரமேஸ்வரிக்கு விமானங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கோயில் திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு செப்.16-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப்.8-ம் தேதி காலை 6.30 மணிக்கு கும்பாபிஷேக விழாவுக்கான பந்தக்கால் நடப்பட்டது.
தொடர்ந்து, செப்.13-ம் தேதி (இன்று) மகா கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி ஹோமம், அஸ்வ பூஜை நடைபெறுகிறது. 14-ம் தேதி நவக்கிர ஹோமங்கள், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பண பூஜை, கும்பம் அலங்காரம், கலாகர்ஷனம், கலசங்கள் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.
» 83,000 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் புதிய சாதனை: முதலீட்டாளருக்கு ரூ.6.6 லட்சம் கோடி லாபம்
» இமாச்சல பிரதேச மசூதி விவகாரம்: அங்கீகரிக்கப்படாத கட்டிட பகுதியை இடிக்க முஸ்லிம்கள் ஒப்புதல்
செப்.15-ம் தேதி கோயிலில் புதிதாக எழுந்தருளி அருள்பாலிக்கவுள்ள அனைத்து விக்ரகங்களும் கிரிவலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, கோபுர விமானம், கலச ஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், விக்ரகங்கள் நிலைநிறுத்தும் நிகழ்வும், அனைத்து தெய்வ திருமேனிகளுக்கும் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்வும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு சிறப்பு நான்கு வேத, தேவாரம் பஞ்ச புராண, கீத, நாத, தாள, உபசாரம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக நாளான செப்.16-ம் தேதி காலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை, தத்வார்ச்சனையும், அதனை தொடர்ந்து கிரஹப்ரிதி கலசங்கள் புறப்பாடும் நடைபெறுகிறது.
காலை 6.50 மணிக்கு ஆலய விமான கும்பாபிஷேகமும், காலை 7.10 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மஹா அபிஷேகம் உடன் மஹா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு புஷ்பக வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
19 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
21 days ago
ஆன்மிகம்
21 days ago