ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

By செய்திப்பிரிவு

குமுளி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (செப். 13) நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில்ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்தஆண்டு வரும் 15-ம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, வரும் 13-ம்தேதி மாலை 5 மணிக்கு தந்திரிகண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்துவைக்கிறார். அன்றுபூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (செப். 14) அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வரும் 15-ம்தேதி திருவோண சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. 15, 16-ம் தேதிகளில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம்விருந்து வழங்கப்படும். வரும் 16-ம் தேதி மாத வழிபாடு தொடங்கும். 21-ம் தேதி வரைநடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்