சென்னை - இஸ்கான் கோயிலில் விமர்சையாக நடந்த ராதாஷ்டமி விழா!

By துரை விஜயராஜ்

சென்னை: சென்னை ஈசிஆர் அருகே உள்ள இஸ்கான் கோயிலில் ராதாஷ்டமி விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்கான் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீமதி ராதாராணியின் திவ்ய தோற்றத்தை கொண்டாடும் ராதாஷ்டமி விழா ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு ராதாஷ்டமி விழா இன்று (செப்.11) இஸ்கான் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், விழாவின் முக்கிய நிகழ்வாக, காலை 10.30 மணிக்கு கீர்த்தனை, 11.15 மணிக்கு உற்சவர் கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமாவுக்கு அபிஷேகம் ஆராதனை நடடைபெற்றது.

தொடர்ந்து, 11.45 மணிக்கு ராதாஷ்டமி மற்றும் ஸ்ரீமதி ராதாராணியின் முக்கியத்துவம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த சொற் பொழிவை பானு சுவாமி மகாராஜ் வாழங்கினார். பின்னர் மதியம் 12.30 மணிக்கு ஆராதனையும் அதன் பிறகு பிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. ராதாஷ்டமி விழாவையொட்டி, இஸ்கான் கோயில் இன்று முழுவதும் பக்தி கொண்டாட்டங்களால் நிரம்பியிருந்தது.

மூலவர் கிருஷ்ணர், ராதை, லலிதா, விசாகா ஆகியோர் மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தனர். பக்தர்களின் பாடல்கள் மற்றும் ஸ்ரீமதி ராதா ராணியின் தெய்வீக நிகழ்ச்சிகள் குறித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ராதாஷ்டமி விழாவில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE