விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள உலகப்புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் தங்க கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விற்பனை களைகட்டியுள்ளது. உலகப்புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் தங்க கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று, விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வீடுகளில் வைத்து வணங்க சிறிய விநாயகர் சிலைகள், பழங்கள் பெரிய மார்க்கெட், நேரு வீதி, மற்றும் பாரதி வீதி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் விற்பனைக்கு வந்தது.

இவற்றை வாங்க மக்கள் கூட்டம் இன்று காலை முதலே அலைமோதியது.மண் விநாயகர், காகித விநாயகர் என ஒரு அடி முதல் 12 அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகளும், அதோடு விநாயகருக்கு வைத்து வழிபட பழ வகைகள், பூக்கள் மற்றும் பலவிதமான. வண்ணக் குடைகள் விற்பனையானது.

1 1/2 அடி விநாயகர் சிலை ரூ 100 முதல் ரூ 700 வரையும் விற்பனை செய்யப்பட்டது. பெரிய விநாயகர் சிலை 5 அடி ரூ 6 ஆயிரம் முதல், 12 அடி ரூ.16 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் வண்ணக்குடை ரூ.10 முதல் ரூ.150 வரை விற்பனைக்கு வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE