சென்னை: இஸ்கான் கோயிலில் செப்.11-ம்தேதி ராதாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்கான் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீமதி ராதாராணியின் திவ்ய தோற்றத்தை கொண்டாடும் ராதாஷ்டமி விழா ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் இந்தாண்டு ராதாஷ்டமி விழா செப்.11-ம்தேதி இஸ்கான் கோயிலில் கொண்டாடப்படுகிறது. ராதாஷ்டமிவிழாவையொட்டி, இஸ்கான்கோயிலில் பக்தி கொண்டாட்டங்கள், அழகான அலங்காரம், பக்தர்களின் பாடல்கள் மற்றும் மதி ராதாராணியின் தெய்வீக நிகழ்ச்சிகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் மதியம் வரை நோன்பு இருந்து, அதன் பிறகு பிரசாதம் (புனித உணவு) பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில் விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 10.30 மணிக்கு கீர்த்தனை, 11.15 மணிக்கு அபிஷேகம், 11.45 மணிக்கு ராதாஷ்டமி மற்றும் மதி ராதாராணியின் முக்கியத்துவம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சியும், மதியம் 12.30 மணிக்கு ஆராதனையும் அதன் பிறகு பிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago