கார்முகில் வண்ணர் கோயிலில் 26-ல் கிருஷ்ண ஜெயந்தி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தியாகராய நகரில் மாம்பலம் நெடுஞ்சாலை லாலா தோட்டத்தில் உள்ள ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கார்முகில் வண்ணப் பெருமாள் கோயிலில் ஆக.26-ம் தேதி 29-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், சாற்றுமுறை, மங்கலஹாரத்தி ஆகியன நடைபெற உள்ளன.

மாலை 6 மணி அளவில் வழுக்கு மரம் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 7.30 மணி அளவில் கோதண்ட ராமானுஜதாசரின் சிஷ்யர் கிருஷ்ண ராமானுஜ தாசர் பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியுடன் ஸ்ரீ கார்முகில் வண்ணர், ருக்மிணி -சத்யபாமாவுடன் புறப்பாடு கண்டருள உள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுரவத் தலைவர் எம்.நரசிம்மன், தலைவர் மெக்கானிக் வி.மோகன், துணைத் தலைவர் இ.சீனிவாசன், செயலர்கே.சாணக்ய பாபு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

15 days ago

மேலும்