அக்.4 முதல் 12-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்

By செய்திப்பிரிவு

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இதையடுத்து ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு காணிக்கையாக வழங்க உள்ளார். அன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

முக்கிய நிகழ்வாக 8-ம் தேதி இரவு கருட சேவையும், 11-ம் தேதி காலை 7 மணிக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறும். மறுநாள் 12-ம் தேதி காலையில் சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் சிறப்பு தரிசனங்களையும் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. சிபாரிசு கடிதங்கள் மூலம் தரிசனம், தங்கும் இடம் வழங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE