திருப்பதி தேவஸ்தான இணையத்தில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ம் தேதி வெளியீடு

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் நவம்பர் மாதம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக, ஆன்லைன் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இம்மாதம் வெளியிட உள்ளது.

அதன்படி, வரும் 19-ம் தேதி திங்கட்கிழமை, காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் குலுக்கல் முறை ஆர்ஜித சேவை தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இம்மாதம் 22-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் ஆன்லைனில்முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி காலை10 மணிக்கு முன்பதிவு செய்யலாம். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம்தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்காக ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி காலை 11 மணிக்கும், மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் இதே நாளில் மதியம் 3 மணிக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு களுக்காக வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கும், டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் திருமலையில் தங்கும் விடுதிகளுக்காக 24-ம்தேதி மதியம் 3 மணிக்கும் இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தேவஸ்தான கோயில்களில் ஸ்ரீவாரி சேவை எனும் தன்னார்வ தொண்டு புரிய (ஜெனரல்) ஆகஸ்ட் 27-ம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை புரிய அன்று மதியம் 12 மணிக்கும், பரகாமணியில் பணியாற்ற மதியம் 1 மணிக்கும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்