சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் 3 நாட்களுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறவுள்ளன.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர்கோயிலில் சிறப்பு வழிபாடு, பூஜை மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 25-ம் தேதி காலை 10மணி சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டநிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
26-ம் தேதி அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12.30 மணி வரைமங்கல ஆரத்தி, தர்ஷன் ஆரத்தி மற்றும் குரு பூஜை, சிறப்பு ஸ்ரீமத்பகவதம் வகுப்பு, கீர்த்தன மேளா,சந்த்யா ஆரத்தி, மஹா அபிஷேகம், மஹா ஆரத்தி, அனுகல்ப பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
27-ம் தேதி நந்தோத்சவ மற்றும் ஸ்ரீல பிரபுபாதா வ்யாச பூஜை காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை கீர்த்தன் மற்றும் ஸ்ரீல பிரபுபாதா புகழாரத்தி, ஸ்ரீல பிரபுபாதா அபிஷேகம், பானு ஸ்வாமி மகாராஜ் வழங்கும் வகுப்பு, ஸ்ரீல பிரபுபாதா ஆரத்தி மற்றும் ராஜ போக் ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago