ஓஷோ சொன்ன கதை: நீங்கள் நீங்களாக இருங்கள்

By ம.சுசித்ரா

னது தோட்டத்தின் செடி, கொடி, மரங்களெல்லாம் கருகிப் பட்டுப்போய்க் கிடப்பதைக் கண்டார் அரசர் ஒருவர். பைன் மரத்தைப் போல நெடுநெடுவென உயரமாக இல்லாததால்தான் தான் சருகாகிப் போனதாகச் சொன்னது ஓக் மரம்.

பைன் மரத்தைப் பார்த்தால் அதுவும் வாடிப்போய்க் கிடந்தது. தான் திராட்சைக் கொடிபோலக் கொத்துக்கொத்தாகத் திராட்சைகளை விளைவிக்க முடியாததால் சோர்ந்துபோனதாக அது புலம்பியது. ரோஜாவைப் போல மலர முடியாததால் சுருண்டுபோனதாகச் சொன்னது திராட்சைக் கொடி.

இவற்றுக்கிடையில் வயோலா பூக்கள் மட்டுமே எப்போதும்போல பூத்துக் குலுங்குவதைக் கண்டார் அரசர். வயோலா செடியிடம் இதுஎன்ன அதிசயமென்று கேட்டார். “என்னை விதைத்தபோதே என்னிடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது வயோலாதான் என்று தீர்மானித்தேன். ஏனென்றால் உங்களுக்கு ஓக், திராட்சை, ரோஜா வேண்டியிருந்தால் அவற்றை மட்டுமே நீங்கள் நட்டிருப்பீர்கள். அப்படியான நிலையில், என்னால் முடிந்தவரைக்கும் சிறந்ததை உங்களுக்குத் தர வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் நானாக இல்லாது வேறெதுவாகவும் இருக்க என்னால் முடியாது. ஆகையால், என்னில் சிறந்ததைத் தங்களுக்குத் தர முயல்கிறேன்” என்றது வயோலா.

புத்தர் உரைத்ததைத்தான் வயோலாவும் சொல்கிறது. நீங்கள் இங்கிருக்கக் காரணம் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதுவே இங்கு தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் வேறொருவர் இங்கிருந்திருப்பார். நீங்கள் தேவையற்ற பட்சத்தில் இங்கு ஜனித்திருக்க மாட்டீர்கள். இன்றியமையாத ஏதோ ஒன்றை நீங்கள் இட்டு நிரப்புகிறீர்கள். நீங்கள் நீங்களாகவே இருப்பது அவசியம்.

“புத்தராக மாறுங்கள், இயேசுவாக மாறுங்கள், கிருஷ்ணனாக மாறுங்கள்” என்று மாமேதைகள் உங்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால், எவரொருவரும் நீங்கள் நீங்களாகவே இருக்கும்படி சொல்வதில்லை.

நீங்கள் எதற்காகப் புத்தராக வேண்டும்? புத்தர் தேவைப்பட்டிருந்தால் ஏகப்பட்ட புத்தர்கள் படைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், தான் எதிர்பார்த்த புத்தர் முழுமையாகக் கிடைத்துவிட்டதால் வேறொரு புத்தரோ ஏசுவோ மீண்டும் படைக்கப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இயற்கையால் எத்துணை மதிக்கப்படுகிறீர்கள் என்பதை இப்போது புரிந்துகொள்ளுங்கள். நீங்கள்தான் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் – புத்தரோ ஏசுவோ கிருஷ்ணனோ அல்ல.

அவர்களுடைய பணி நிறைவடைந்துவிட்டது. தங்களுடைய இருப்புக்கு அவர்கள் நறுமணம் சேர்த்துவிட்டார்கள். நீங்கள்தான் இன்றைய தேவை, மேலும் அவசியம். இப்போது நீங்கள் உங்களுடைய நறுமணத்தையே பரப்ப வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்