அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம்; பழநி கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம்

By ஆ.நல்லசிவன்

பழநி: அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் வந்த மூத்த குடிமக்கள் பழநி முருகன் கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களுக்குக் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பேரை ஆண்டுக்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைக்கும் திட்டத்தை அறநிலையத்துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4-ம் கட்டமாக அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லும் திட்டம் ஆகஸ்ட் 7-ம் தேதி சுவாமிமலையில் தொடங்கியது.

இதில், சுவாமிமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 206 மூத்த குடிமக்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் பேருந்துகளில் நேற்று இரவு பழநி அழைத்து வரப்பட்டனர். அவர்களைப் பழநி கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை வின்ச் ரயில் மூலம் பழநி மலைக்கோயிலுக்குச் சென்ற மூத்த குடிமக்கள், தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்தனர். அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர், அவர்கள் பழநியிலிருந்து மதுரையிலுள்ள பழமுதிர்சோலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, பழநி கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர்கள் சொர்ணம், ஆறுமுகம் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்