விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு 7-ம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்திப் பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இவ்விழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிது. இம்மாதம் 7-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (ஆக.7) புதன்கிழமை அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 7ம் தேதி புதன்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக இம்மாதம் 3 வது சனிக்கிழமையான 17-ம் தேதியன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago