மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தென் இந்தியாவில் இருந்து முதல்முறையாக மஹாராஷ்டிரா மாநிலம் மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ரயில்வே - தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு ஆன்மிக தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சிறப்பு சுற்றுலாரயில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்நிலையில், தென் இந்தியாவில் இருந்து முதல்முறையாக மஹாராஷ்டிரா மாநிலம் மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலத் துக்கு வரும் ஆக.24-ம் தேதிஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப் படுகிறது.

11 நாட்கள் சுற்றுலா: மதுரையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், சேலம்,சென்னை வழியாக சென்று ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் அஜந்தா, எல்லோரா குகைகள், மும்பை, மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலம், பஞ்சகனி கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. 11 நாட்கள் கொண்ட இந்த ஆன்மிக சுற்றுலாவுக்கு 3-ம் வகுப்பு ‘ஏசி’-க்கு ரூ.31,900, 2-ம் வகுப்பு ‘ஏசி’-க்கு ரூ.38,950 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மற்றொரு பிரிவாக ஆறு ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வைத்தியநாத், அவுங்க நாகநாத், கிருஷ்ணேஸ்வரர், திரியம்பகேஸ்வரர், பீமசங்கரர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள சைலம் மற்றும் ஷீரடி சாய் பாபா தரிசனம், சனி சிங்கனாப்பூர், சனீஸ்வரர் பண்டரிபுரம் பாண்டுரங்கன் தரிசனம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 11 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு 3-ம் வகுப்பு ஏசி-க்கு ரூ.27,950 கட்டணம் ஆகும். மேலும் தகவல்களை பெற 7305858585 என்ற எண்ணைதொடர்பு கொள்ளலாம் என்றுரயில்வே அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE