அமர்நாத் யாத்திரையில் ஒரே நாளில் 7,500-க்கும் மேற்பட்டோர் தரிசனம்: இதுவரை 1.59 லட்சம் பேர் வழிபாடு

By செய்திப்பிரிவு

பஹல்காம்: அமர்நாத் யாத்திரை தொடங்கி எட்டாம் நாளான நேற்று முன்தினம் 7,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். யாத்திரை தொடங்கியதில்இருந்து இதுவரை 1.59 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

காஷ்மீரின் தெற்கு இமயமலைப் பகுதியில் 3,800 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் உள்ளது. இங்கு பனிலிங்க தரிசனம் செய்யஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இங்கு இரு பாதைகள் வழியாக யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

ஒன்று அனந்நாக் மாவட்டத்தில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் 48 கி.மீ தூரம் உள்ள நுன்வான்-பகல்காம் பாதை. மற்றொன்று கந்தர்பாலில் 14 கி.மீதூரத்துக்கு அமைந்துள்ள பால்தால் பாதை. இந்த வழியில் உயரமான மலைப் பாதைகள் அதிகம் இருக்கும்.

இந்தாண்டு யாத்திரை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்க தரிசனம் செய்தனர். இங்கு 2 நாட்களுக்கு முன்கன மழை பெய்ததால் யாத்திரைதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை குறைந்ததும் சனிக்கிழமை யாத்திரை மீண்டும் தொடங்கியது. யாத்திரை தொடங்கி 8-ம்நாளான நேற்று முன்தினம் மொத்தம் 7,552 பக்தர்கள், பனிலிங்கமாக அமைந்துள்ள பாபா போலேநாத்தை தரிசனம் செய்தனர்.

இவர்களில் 5,019 பேர் ஆண்கள், 1,406 பேர் பெண்கள். 118 பேர் சாதுக்கள், 3 பேர் சாத்விக்கள். பாதுகாப்பு படையினர் 869 பேர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 3 பேர், 134 குழந்தைகளும் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். இதுவரை அமர்நாத் யாத்திரையில் 1,59,498 பேர் பங்கேற்று பனிலிங்க தரிசனத்தை முடித்துள்ளனர்.

இந்தாண்டு யாத்திரையில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர். இருவரும் பால்தால் பாதை வழியாக வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர். மொத்தம் 52- நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை அடுத்த மாதம் 19-ம்தேதியுடன் முடிவடைகிறது. கடந்தாண்டு இந்த யாத்திரையில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE