தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கொடியேற்றம்: மே 30-ம் தேதி பட்டினப்பிரவேசம்

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா, ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழாண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

இதையொட்டி, பஞ்சமூர்த்திகள் கோயில் கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினர். பின்னர், தருமபுரம்ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை லமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள், மங்கலவாத்தியங்கள் முழங்க ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில், ஆதீனகட்டளை தம்பிரான் சுவாமிகள்மற்றும் பக்தர்கள் கலந்துகொண்ட னர்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 23-ம் தேதி திருமுறைதிருவிழா, 26-ம் தேதி திருக்கல்யா ணம், திருஞானசம்பந்தர் குருபூஜை, 28-ம் தேதி தேரோட்டம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. தொடர்ந்து, 30-ம் தேதி இரவு தருமபுரம் ஆதீனம் கயிலை ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கொலு காட்சி நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE