மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா உற்சவ சாந்தியுடன் நேற்று நிறைவடைந்தது.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கடந்த 21-ல் மதுரைக்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். 23-ம் தேதி வைகை ஆற்றில்பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து, தேனூர் மண்டபத் தில் கருட வாகனத்தில் எழுந் தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அன்றுஇரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 26-ம் தேதி அதிகாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவு மூன்றுமாவடியிலிருந்து விடைபெற்று, மலைக்குப் புறப்பட்டார். நேற்று முன்தினம் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் கோயிலை அடைந்தார்.
சிறப்பு யாகங்கள்... விழாவின் 10-ம் நாளான நேற்று உற்சவ சாந்தி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் திருமஞ்சனமாகி, கள்ளழகர் மூலஸ்தானம் அடைந்தார். உற்சவ சாந்தியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago