அசோக் நகர் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா கொண்டாட்டம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

சென்னை: அசோக் நகர் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ராம நவமி விழா, நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களிலும், ராமர் கோயில்களிலும் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் ஆஞ்சநேயர் கோயில்களில் நேற்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

சென்னை அசோக் நகரில் உள்ளஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.விழாவை ஒட்டி கடந்த 12-ம் தேதிஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 14-ம் தேதி கனி அலங்கார தரிசனம், 16-ம் தேதி லட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் சுவாமி காட்சி அளித்தார். இந்நிலையில், நேற்று சிறப்பு வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.

ராம நவமியையொட்டி நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அகண்ட  ராம நாம ஜெப வேள்வி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வில் இசையில் ராமர்என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள்கலந்துகொண்டனர். தொடர்ந்து, இன்று சிறப்பு வெற்றிலை மாலை அலங்காரம், 19-ம் தேதி வடைமாலை அலங்காரம், 20-ம் தேதி புஷ்ப அலங்காரம், 21-ம் தேதி செந்தூர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலிப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்