அரியக்கா, பெரியக்கா திருவிழா: 5 டன் கற்பூரம் ஏற்றி விடிய விடிய அம்மனை வழிபட்ட பக்தர்கள்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே அரியக்கா, பெரியக்கா கோயில் திருவிழா நடந்தது. இதில், 5 டன்னுக்கு மேல் கற்பூரம் ஏற்றி 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

போச்சம்பள்ளி அருகே அகரம் மருதேரி தென் பெண்ணை ஆற்றங்கரையில் பழமையான அரியக்கா, பெரியக்கா கோயில் உள்ளது. இக்கோயிலில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தெலுங்கு வருடப்பிறப்பன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 18 கிராம மக்கள் கலந்து கொள்வார்கள்.

இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு, ஊத்தங்கரை அருகே உள்ள எட்டிப்பட்டி கிராமத்திலிருந்த அரியக்கா, பெரியக்கா சிலைகள் நேற்று முன்தினம் மாலை மூங்கில் கூடையில் வைத்து மருதேரி தென் பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன. அப்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றக் கோயில் முன்பு 5 டன்னுக்கு மேல் கற்பூரத்தை வைத்து தீபம் ஏற்றினர். விடிய விடிய கற்பூர ஒளியில் அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். கற்பூரம் நேற்று மாலை வரையில் ஒளிர்ந்தது. மேலும், 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகளை பக்தர்கள் பலியிட்டு, இறைச்சியை அங்கேயே சமைத்து, அம்மனுக்குப் படையலிட்டு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பிரசாதமாக வழங்கினர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருப்பு நிற ஆடை மற்றும் பொருட்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டிருந்தது. விழாவில், 18 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இதையொட்டி, 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

17 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

21 days ago

ஆன்மிகம்

24 days ago

ஆன்மிகம்

25 days ago

ஆன்மிகம்

25 days ago

மேலும்