திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா மார்ச் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் 6-ம் நாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலுக்கு முற்பகல் 11 மணியளவில் வந்தடைந்தார்.
தொடர்ந்து, சேர்த்தி மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை சாதித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
பின்னர், நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு, ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
பங்குனித் தேர் திருவிழாவின் 9-ம் நாளான வரும் 25-ம் தேதி ரங்கநாதர் கோயில் தாயாரான ரங்கநாச்சியார் - நம்பெருமாள் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது.முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago